அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

சனி, 10 அக்டோபர், 2015

மலரன்னையின் சிறுகதைகள்

மலரன்னையின் சிறுகதைகள் தொகுதியாய் வெளியாகியுள்ளது.




மலரன்னையின் எண்பதிற்கு  மேற்பட்ட  சிறுகதைகள் இலங்கையில் வெளியான பல்வேறு வெளியீடுகளில் வெளியாகியிருக்கிறது. சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது.நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளதும் , ஒரு தொடர் நாடகம் நாற்பத்தைந்து அங்கங்களுடன் ஒலிபரப்பானதும்  குறிப்பிடவேண்டியது. இவரது இருபத்தி நான்கு ஆக்கங்கள் இதுவரை பரிசுபெற்றிருக்கின்றன.இவரது பத்து ஆங்கிலக்கவிதைகள் HOTSPRING பத்திரிகையில்  பிரசுரமாகியிருக்கிறது. 
 இவர் ஒரு "ஹோமியோபதி" மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.