சனி, 13 டிசம்பர், 2025

கா.சுஜந்தன்

கா.சுஜந்தன் / ஓவியன்/ சுஜோ, கிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு ஊடகவியலாளர் .இவர் கிளிநொச்சி சுகாதார வைத்திய பிரிவின் உத்தியோக பூர்வ வெளியீடான விழி மருத்துவ மாத இதழின் ஸ்தாபகராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.விழி இதழ் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இவர் சுதேச ஒளி என்ற சுதேச மருத்துவ பிரிவினரின் வெளியீடான காலாண்டு இதழின் ஸ்தாபகராகவும் ஆசிரியராயும் இருந்தார்.கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கிய சுகாதார விஞஞான கல்லூரியின் அக ஒளி வருட சிறப்பு இதழ்களின் (இரு) ஆசிரிய ஆலோசகராய் இருந்தார். புலிகளின் குரல்,ஈழநாதம்,தமீழீழ தேசியத்தொலைக்காட்சி ஆகியவற்றின் சுயாதீன செய்தி வழங்குனராகவும் இருந்தார். விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவினரின் மருத்துவ கையேடுகளின் வெளியீடுகளில் பங்காற்றியிருக்கிறார். இவர் இதழியல்,தத்துவவியல் போன்ற துறைகளில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்திருந்தார்.போர் வலயத்தில் கடமை செய்த உன்னத ஊடகவியலாளர் .