புதன், 8 பிப்ரவரி, 2012

மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம்

மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்களின் பதினைந்தாம் ஆண்டு 
நினைவு தினம் இன்று.இலங்கையில் இருந்து வெளியான ஆரம்ப சரித்திர 
நாவலை ( வன்னியின் செல்வி ) எழுதியவர்.எந்தக்கட்சிகளோடோ,எந்த 
அமைப்புக்களுடனும் தொடர்புபடாமல் எழுதி தள்ளியவர்.எழுத்துகளுடன் 
மட்டும் நில்லாமல் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பாத்திரம் ஏற்று 
நடித்து ஆர்மோனியத்துடன் இசை அமைத்து,மேடைக்கான திரைச் 
சீலைகளை தானே வரைந்து ஒரு சிறந்த கலைஞரானார். 
                                                      தலைமை ஆசிரியர்,மூத்த எழுத்தாளர் என்ற 
தகமைகளுடன் பட்டம் கட்டுவதிலும் விற்பன்னராக இருந்தார்.ஐந்து
அடிக்கு மேற்பட்ட பட்டங்களை விண்ணுடன் ஏற்றி சுமார் ஏழு எட்டு 
மைல் தொலைவில் பறக்கவிடும் அழகு தனி அழகு.அயல் ஊர்களில் 
இருந்தும் இவரிடம் பட்டம் கட்டவருவார்கள் இளையோர்கள்.   
                                                     இவரது மூத்த மகள் மலரன்னை 
அறியப்பட்ட எழுத்தாளர்.இவரது இளைய மகள் அமரர் மங்களேஸ்வரி 
அகில இலங்கை ரீதியிலான சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் 
வென்றவர்.இவரது இரண்டாவது மகன் 1970 களில் மேடை நாடகங்களை 
எழுதி இயக்கி பிரதம பாத்திரங்களில் நடித்தவர்.மெழுகுவர்த்தி என்ற 
நாடகம் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது மகனும் மேடை நாடகங்களை 
எழுதி இயக்கி பிரதம பாத்திரத்தில் நடித்தவர் என்பதுடன் இவர் ஒரு 
சிறந்த பாடகராகவும் திகழ்கிறார்.இவர் "இராகவாணி " என்ற இசைக்குழுவையும் நடாத்தி வருகிறார். இவர் நிகரற்ற பாடகி ஜானகி 
அவர்களுடன் இணைந்து நிகழ்வுகளில் பாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                          ஒப்பற்ற கலைஞனின் வரலாறு அழியாது 
மாறாக அது தொடரும்.

மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்கள் மலையக பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.பின் ஓய்வு பெற்று சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன் சன்ஸ் என்ற பெரும் வர்த்தக நிலையத்தில் பிரதம கணக்கராய் இருந்தவர்.அதே காலத்திலேயே பல வேறு வர்த்தக நிலையங்களின் கணக்காய்வாளராகவும் இருந்தார்.இவரது துணைவி திருமதி செல்வசிகாமணி அவர்கள் ஆறு ஆண்டுகள் மலையகப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராய் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.