சனி, 23 நவம்பர், 2013

மலரவனின் இருபத்தியோராம் ஆண்டு நினைவு.



மாவீரனும் எழுத்தாளனுமான மலரவன் வீரச்சாவு அடைந்து இருபத்தியொரு வருடங்கள்.மலரவன்,காலம் சென்றவர்களான  சி.இராசரத்தினம் ( தலைமை ஆசிரியர்,தலைமை கணக்கர்,மூத்த எழுத்தாளர் ) ,செல்வசிகாமணி   இராசரத்தினம் ( ஆசிரியை/ மலையக பாடசாலை),
கா.பொன்னம்பலம் ( ஒப்பந்தகாரர் )தம்பதிகளின் பேரன் ஆவான்.

லெப்.கவியரசன்,லெப்.கேர்னல் மலரவன் மாஸ்டரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதய,கண்ணீர் அஞ்சலி  


செவ்வாய், 8 அக்டோபர், 2013

K.VIJINTHAN

cholan%201.jpg
 K.VIJINTHAN ( 08/04/1972 - 24/11/1992)
One of the best tamil Writer from north Srilanka
 He wrote four books ( in tamil language)
 one book translated and published by penguin publishers  
     "War journey"
He won two awards for his books.
 His father is a English and Ayurveda Doctor
                  (Field Doctor).
 HIS Mother is a writer and Homeopathy Doctor. 
 His fathers father (grandfather) was 
       a Civil Contractor and Farmer.
 His fathers mother was a house wife
 His mothers father was a senior writer and retired head master and 
       chief clerk( in private firm)
 His mothers mother was a teacher (6 years)

சனி, 28 செப்டம்பர், 2013

மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம்


இலங்கையில் இருந்து வெளியான ஆரம்ப சரித்திர நாவலை ( வன்னியின் செல்வி ) எழுதியவர்.எந்தக்கட்சிகளோடோ,எந்த அமைப்புக்களுடனும் தொடர்புபடாமல் எழுதி தள்ளியவர்.எழுத்துகளுடன் மட்டும் நில்லாமல் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பாத்திரம் ஏற்று நடித்து ஆர்மோனியத்துடன் இசை அமைத்து,மேடைக்கான திரைச் சீலைகளை தானே வரைந்து ஒரு சிறந்த கலைஞரானார்.
                                                     தலைமை ஆசிரியர்,மூத்த எழுத்தாளர் என்ற  தகமைகளுடன் பட்டம் கட்டுவதிலும் விற்பன்னராக இருந்தார்.ஐந்து அடிக்கு மேற்பட்ட பட்டங்களை விண்ணுடன் ஏற்றி சுமார் ஏழு எட்டு மைல் தொலைவில் பறக்கவிடும் அழகு தனி அழகு.அயல் ஊர்களில் இருந்தும் இவரிடம் பட்டம் கட்டவருவார்கள் இளையோர்கள்.
                                                    இவரது மூத்த மகள் மலரன்னை  அறியப்பட்ட எழுத்தாளர்.இவரது இளைய மகள் அமரர் மங்களேஸ்வரி 1960 களில் பாடசாலை மட்டத்தில் அகில இலங்கை ரீதியிலான சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.இவரது இரண்டாவது மகன் 1970 களில் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பிரதம பாத்திரங்களில் நடித்தவர்.மெழுகுவர்த்தி என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது மகனும் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பிரதம பாத்திரத்தில் நடித்தவர் என்பதுடன் இவர் ஒரு சிறந்த பாடகராகவும் திகழ்கிறார்.இவர் "இராகவாணி " என்ற இசைக்குழுவையும் நடாத்தி வருகிறார். இவர் நிகரற்ற பாடகி ஜானகி, வாணி ஜெயராம்  மற்றும் T.K கலா, கல்பனா ஆகியோருடன் இணைந்து மேடை  நிகழ்வுகளில் பாடல்கள் பாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                         ஒப்பற்ற கலைஞனின் வரலாறு அழியாது 
மாறாக அது தொடரும்.
மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்கள் மலையக பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.பின் ஓய்வு பெற்று சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன் சன்ஸ் என்ற பெரும் வர்த்தக நிலையத்தில் பிரதம கணக்கராய் இருந்தவர்.அதே காலத்திலேயே பல வேறு வர்த்தக நிலையங்களின் கணக்காய்வாளராகவும் இருந்தார். இவரது மனைவி திருமதி செல்வசிகாமணி அவர்கள் மானிப்பாயை சேர்ந்த அமரர் ஓவசியர் கணபதிப்பிள்ளை அவர்களின் இளைய மகள்,  இவர் ஆறு ஆண்டுகள் மலையகப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராய் இருந்தவர் என்பதுடன் கணவனின் எழுத்துக்களின் முதல் வாசகியாகவும் இருந்தார்.
ஒரு பரம்பரையின் மூன்று தலை முறை எழுத்தாளர்கள் ஈழத்தில் ஒரே பரம்பரையில் தோன்றிய வேறு மூன்று தலை முறை எழுத்தாளர்கள் உளரோ தெரியவில்லை. கச்சாயில் இரத்தினம் இலங்கையின் மூத்த எழுத்தாளர் . இவரது நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட சிறு கதைகள் இலங்கை, இந்திய பத்திரிகை,வானொலி,சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக்கிறது. இவற்றுள் தொடர் கதைகளும்,அடங்கும். இவரது நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.தொடர் நாடகங்களும் அடங்கும்.இலங்கை தமிழ் வானொலியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நிறைவில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வானொலி நாடகங்களின் அதிக பங்களித்தவர்களில் நால்வரில் ஒருவராக இவரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பல மேடை நாடகங்களையும் எழுதி,இயக்கி மேடை ஏற்றியுள்ளார். இவர் பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.இலவு காத்த கிளி என்ற கதை அகில இலங்கை ரீதியில் முதற் பரிசு பெற்றது.கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார்.இவர் ஆர்மோனியம்,புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராய்த் திகழ்ந்தார். திரைச் சீலையில் ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார். பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (சிறுகதைகள்),வன்னியின் செல்வி ( நாவல்) நூலுருப்பெற்றுள்ளன.
இவரது மகளான மலரன்னை அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக பலராலும் அறியப்பட்டுள்ளார்.இவரது எண்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள் ,வானொலிகள் ,சஞ்சிகைகளில் உள்,வெளி நாடுகளில் பிரசுரமாகியுள்ளது. நாற்பதிற்கும்  மேற்பட்ட வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. பத்து ஆங்கிலக்கவிதைகள் ஆங்கிலப்பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இவரது பல ஆக்கங்கள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன.நான்கு  தடவைகள் சர்வதேச அளவில் நடை பெற்ற போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.சித்திரன்,மல்லிகை சிறுகதைப்போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். இவர் ஓவியம்,ஒளிப்படம் முதலிய வற்றிலும் ஈடு பாடு உடையவர். இவர் சில மொழி பெயர்ப்புகளையும் செய்துள்ளார்.
மலரவன் இவன் மலரன்னை அவர்களின் இளைய மகன்.இவன் இப்போது உயிரோடு இல்லை.இவனது நாலு நூல்கள் வெளியாகி பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல் பரிசு பெற்றது. இதுவரை ஐந்து பதிப்புகளை பெற்றுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு) மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்) புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது. பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் வெளியீடு ஆகியிருக்கவில்லை

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

செ.செல்வரட்ணம்,சமூகசேவையாளர் கிளிநொச்சி



கிளிநொச்சி,கரைச்சி இந்து இளைஞர் பேரவை - பொருளாளர்.
கிளிநொச்சி திருநெறிக்கழகம் -   பொருளாளர்.
                          (முன்னாள் செயலாளர் )
கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறுவர் இல்லம் - உபதலைவர்.
கிளிநொச்சி,கனேசானந்தா மகாதேவா ஆச்சிரமம் - உபதலைவர்.
கிளிநொச்சி கந்தசாமி கோயில் அறங்காவல்குழு  - உபதலைவர்.
                           (முன்னாள் செயலாளர் )
கிளிநொச்சி ,பரந்தன் சித்தி விநாயகர் ஆலயம் - செயலாளர்
கிளிநொச்சி ,கந்தபுரம் முருகன் ஆலயம் - ஆலோசகர்
கிளிநொச்சி ,கந்தபுரம் இத்தியடி அம்மன் ஆலயம் - ஆலோசகர்
கிளிநொச்சி ,பரந்தன் முத்துமாரி அம்மன் ஆலயம் - ஆலோசகர்
கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன்கோயில் - நிர்வாக உறுப்பினர்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி முருகன் ஆலயம் -ஆயுள் அங்கத்தவர்.
கிளிநொச்சி,செஞ்சிலுவைச்சங்கம் -  ஆயுள் அங்கத்தவர்.
கிளிநொச்சி,முதியோர் இல்லம்-ஆயுள் அங்கத்தவர்.
கிளிநொச்சி,வர்த்தக சங்கம்- நிர்வாக உறுப்பினர்.

முன்னாள் பங்காளர் - ரம்யா,மைதிலி இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி.
முன்னாள் உரிமையாளர்- செந்தூரன் இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி.
முன்னாள் மின்பொறுப்புனர்,பரந்தன் இரசாயன தொழிற்சாலை கிளிநொச்சி.
முன்னாள் மின்னியல் போதனாசிரியர்,முறைசாராக் கல்விப்பிரிவு,கல்வித்திணைக்களம்,கிளிநொச்சி.
முகாமையாளர்- சிவகுரு காட்வெயார் அன்ட் மோட்டோர்ஸ் ,பரந்தன்,கிளிநொச்சி.

                  இவரது துணைவியார்
              திருமதி கிருஷ்ணாதேவி செல்வரட்ணம்
         முன்னாள் அரச பதிவுபெற்ற மின் ஒப்பந்தகாரர்.
           முன்னாள்  உரிமையாளர்-  கிருஷ்ணா எலெக்ட்ரிகல் வேக்ஸ்
          நிர்வாக உறுப்பினர்- சைவ மங்கையர் கழகம் ,கிளிநொச்சி.


                இவரது பிள்ளைகள்

          சு.ராஜசெல்வி,செ.சேரலதன் ,ஐ.ரம்யாதேவி

ஞாயிறு, 26 மே, 2013

WAR JOURNEY

மலரவனின் போர் உலா என்ற பயனக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பென்குயின் பதிப்பகத்தால்WAR JOURNEY என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.ஏற்கனவே போர் உலா என்ற நூல் ஐந்து தடவைகள் அச்சிடப்பட்டு வெளியாகியிருந்தது.போர் உலா இலங்கை இலக்கியப்பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான  இலக்கியத்தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றது.இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.



சிறிலங்கா இராணுவம் கட்டைக்காட்டில் இருந்து ஆனையிறவு முகாம் நோக்கி இராணுவ நடவடிக்கையின் (பலவேகயா 2- 1992) இராணுவ ஆய்வை மலரவன் செய்யப்பணிக்கப்பட்டு   அவன் அதை பூர்த்தி செய்திருந்தான்.
அந்த ஆய்வு மிக அழகாக செய்யப்பட்டிருந்ததாக தலைவர் அவர்களால் சொல்லப்பட்டது.இராணுவம்,புலிகளின் பலம் பலவீனம் அவ்ஆய்வில் வெளித்தெரிவதால் அந்த இராணுவ ஆவணம் நூல் ஆக்கப்படவில்லை. மலரவன்  யாழ் மாவட்ட இராணுவ அறிக்கைப்பொறுப்பாளனாய்  நியமிக்கப்பட்டான்.


சு.செல்வி