வெள்ளி, 19 நவம்பர், 2021

 சில நாட்களுக்கு முன் கடந்துபோன கிளிநொச்சி மண்ணுக்குரிய இரு மரணங்களை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, துயருறுகிறது,ஆழ்ந்த இரங்கலுடன் கடந்துபோக முடியவில்லை. முதலாவது; உயர்கல்வி கனவுகளுடன் ஊற்றுப்புல கிராமத்திலிருந்து நகர் பாடசாலைக்கு வந்த  ஏழை மாணவியின் இழப்பு.  பாதைக்கடவைக்கு  இருபக்கங்களிலும் பாதைக்கடவையின் கரையில் இருந்து நாலு மீற்றர் தூரத்தில் 10 சென்றி மீட்டர் அகல வெள்ளைக்கோடு இடப்பட்டிருக்கவேண்டும், அதற்கு அப்பால்த்தான் வாகனம் அசையாமல் நிற்கவேண்டும் , அப்படி இருந்ததா தெரியவில்லை. குறிப்பிட்ட இடைவெளி இருப்பின் பாதசாரிகளுக்கு  reaction  time போதுமானதாக இருந்திருக்கும். எப்படி என்றாலும் போக்குவரத்து விதிகள் சீராக கடைப்பிடிக்கப்படவேண்டும். இரண்டாவது ; ஆசிரியரின் / அதிபரின் இழப்பு. மக்களுடன் தாங்களும்   இடம்பெயர்ந்து துன்புற்றிருந்த காலத்திலும் மாணவர்களின் கல்வியூட்டலில் சளைக்காமல் ஈடுபட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்த ஏணி. நாங்கள் இழந்திருக்கக்கூடாத இழப்புகள்.     

வியாழன், 28 அக்டோபர், 2021

மலரன்னை சிறுகதை இலக்கியத்திற்காக கலைக்குரிசில் விருது பெறுகிறார்.

 மலரன்னையின் "அப்பாவின் தேட்டம் " சிறுகதைத்தொகுதி ஆண்டுக்கான தேசிய அரச இலக்கியவிழாவில் சான்றிதழ் பெறுகிறது. 




வியாழன், 25 மார்ச், 2021

சனி, 13 பிப்ரவரி, 2021

 



படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில்  (வெள்ளிநாதம்  ) பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது.நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார்.
முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைகளுக்காக வெற்றியாளர் சான்றிதழ்கள்   பெற்றிருக்கிறார்.  
இவரது முப்பது விஞ்ஞானக்கட்டுரைகள்  கிளிநொச்சியில் வெளியான "விழி " மருத்துவ இதழ்களில் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய "கைவிளக்கு" என்ற சிறுவர் நூல் 2010 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 
கொரோனா காலத்தையொட்டி "ஜீவநதி" இதழ் அகில உலக ரீதியாக நடாத்திய கவிதை போட்டியில் தெரிவான கவிதைகளின் கவிதைத்தொகுதியிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. 
 " தடாகம்" அமைப்பு 2018  ஆம் ஆண் டு உலகம் தழுவிய ரீதியில் 2018  ஆம் ஆண்டு நடாத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று கவின்கலை பட்டத்தையும் பெற்றார். 
பாடசாலை வாத்திய அணியில் melodica வாத்தியத்தை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.1998 ஆம் ஆண்டு கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்துச் சஞ்சிகை வடகிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்றது, இவர் அச்சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகருக்கான சான்றிதழை பெற்றார்.
 svartsol12.blogspot.com  என்ற வலையிணையத்தில்  நோர்வேஜிய மொழியிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.  



சனி, 23 ஜனவரி, 2021

சனி, 16 ஜனவரி, 2021