மலரன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

மூத்த எழுத்தாளர் மலரன்னை அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹனிதூம சுனில் செனெவி அவர்களால் மூத்த எழுத்தாளர் மலரன்னை அவர்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் நேற்று (18 .10 .25 ) நடைபெற்ற கலை கலாசார நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். அரச இலக்கிய குழு, இலங்கை கலைக்குழு மற்றும் புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையோடு இந்நிகழ்வு நடைபெற்றது.

சனி, 18 அக்டோபர், 2025

சனி, 11 அக்டோபர், 2025

எழுத்தாளர் மலரன்னை

மலரன்னை ஓர் ஈழத்து பெண் எழுத்தாளர். மூத்த புகழ் பெற்ற எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் மகள். 1950 களில் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்.1993 ஆம் ஆண்டில் இவரது முதலாவது சிறுகதை வெளியாகியது.அன்றிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவரது 250 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. " கனவுகள் நனவாகும் " என்ற தொடர்நாடகம் (நாற்பத்தி மூன்று அங்கங்கள் ) ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பத்து ஆங்கிலக் கவிதைகள் Hot spring என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. இவரது 45 இற்கும் மேற்பட்ட தனி ஆக்கங்கள் பல்வேறு திறந்தபோட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. நான்கு முறை சர்வதேச அளவில் நடை பெற்ற இலக்கிய போட்டிகளில் சிறுகதை, நாடக எழுத்துருவுக்காக பரிசு பெற்றுள்ளார். சிரித்திரன், மல்லிகை சிறுகதைப் போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். "பாலைவனத்துப்புஸ்பங்கள்" என்ற நாவல் தேசிய கலாச்சாரப்பேரவை யின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது . இலக்கிய விவரணம் எழுதுவதிற்கான பிரிவு போட்டியிலும் முதற்பரிசு பெற்றிருக்கிறார். இவரது சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும் , சில கவிதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இலக்கியப்பங்களிப்புக்காக கலைமாமணி, கலாபூசணம், கலைஞானச்சுடர் உள்ளீடாக 15 மேற்பட்ட இலக்கியவிருதுகளை பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள், நாவல் என்பன பல்கலைக்கழக மாணவர்களால் தங்களது கல்விற்காக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஓவியம், ஒளிப்படம் முதலியவற்றிலும் ஈடுபாடு உடைய இவர் நூல் பின்னல் (knyting, crocheting ), தையல்கலைகளில் சிறந்து விளங்கினார்.இவர் நூல் பின்னல், தையல் கலையை தனது தாயாரிடமிருந்தே கற்றுக்கொண்டார். இவரது மகன் மலரவனும் ஓர் எழுத்தாளர் என்பதும் மலரன்னை அவர்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதும் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்காக அமைப்பு ஒன்றிலும் அங்கத்தவராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 2 டிசம்பர், 2024

ஞாயிறு, 14 ஜூலை, 2024

எழுத்தாளர் மலரன்னை

ஆசிரியத்தம்பதிகளின் மூத்தமகளான எழுத்தாளர் மலரன்னை அவர்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவர். இவரது மூன்று பிள்ளைகள் ஈழ விடுதலைப்போராட்டத்தில் போராளிகளாக பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.மலரன்னை அவர்களால் எழுதப்பட்ட முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட மாவீரர் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் தாயக வானொலியில் போர்க்காலத்தில் ஒலிபரப்பாகி பெரு வரவேற்புப்பெற்றிருந்தது. மலரன்னை அவர்கள் துயர் சூழ்ந்த சூழலுக்குள் இருந்து தன் இலட்சியம் மாறாது எழுதினார் அதனால் அவருக்கு பல விருதுகள் கிடைக்கவில்லை / பல விருதுகளிலிருந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார், அதையிட்டு அவர் எள்ளளவும் கவலைப்பட்டதில்லைை. ஓவியம், ஒளிப்படம் முதலியவற்றிலும் ஈடுபாடு உடைய இவர் நூல் பின்னல் (knyting, crocheting ), தையல்கலைகளில் சிறந்து விளங்கினார். நூல் பின்னல் (knyting, crocheting ), தையல்கலையை தனது தாயாரிடமிருந்தே கற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 மே, 2024

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

வியாழன், 11 ஜனவரி, 2024

 ஜீவநதி ஏற்பாட்டில் மலரன்னையின் அமுதவிழாவும், மலரன்னையின் வாழ்வும் படைப்பும் நூல் வெளியீடு நிகழ்வு 08.01.2024 திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கோகிலா மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையினை  இரா. குலசிங்கம்  அவர்களும் வெளியீட்டுரையினை விரிவுரையாளர் புலோலியூர் வேல்நந்தகுமார் அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. மலரன்னையின் வாழ்வும் படைப்பும் நூலினை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் வெளியிட்டு வைக்க மலரன்னை அவர்கள் நூலினை பெற்றுக்  கொண்டார்கள்.
மலரன்னையின் சிறுகதைகள் பற்றி எழுத்தாளர் பிரேமினியும், மலரன்னையின் நாவல்கள் என்கிற தலைப்பில்  விரிவுரையாளர் அஜந்தகுமாரும் சிற்றுரை நிகழ்த்தினர்.
அமுத விழா நாயகிக்கான கௌரவிப்பினை ஜீவநதி பதிப்பகத்தின் உரிமையாளரும் ஜீவநதி இதழின் ஆசிரியருமான கலாமணி பரணீதரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து  இந்துநாகரீகத்துறை தலைவரான சுகந்தினி முரளீதரன் அவர்கள் மாலையணிவிப்பு செய்து கௌரவித்தார்.
ஜீவநதி பதிப்பகத்தின் ஏற்பாட்டிலான தமிழர் ஈழ இலக்கிய தாய் என்கிற கௌரவ விருதினை அம்மாவுக்கு மூத்த எழுத்தாளர் அ. ஜேசுராசா வழங்கி வைத்தார்.

நூல் பற்றிய கருத்துரையினை எழுத்தாளர் மயூரரூபனும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து ஊரவர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள் என பலரும் பொன்னாடை போர்த்தி அவரை வாழ்த்தி கௌரவம் வழங்கினர்.  இறுதியாக ஏற்புரையினையும் நன்றியுரையினையும் திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) அவர்கள் நிகழ்த்தினார்.

போராளி எழுத்தாளரும் மாவீரருமான கப்டன் மலரவனின் தாயார் மலரன்னை என்பது குறிப்பிடத்தக்கது.


திங்கள், 20 பிப்ரவரி, 2023

வியாழன், 28 அக்டோபர், 2021

மலரன்னை சிறுகதை இலக்கியத்திற்காக கலைக்குரிசில் விருது பெறுகிறார்.

 மலரன்னையின் "அப்பாவின் தேட்டம் " சிறுகதைத்தொகுதி ஆண்டுக்கான தேசிய அரச இலக்கியவிழாவில் சான்றிதழ் பெறுகிறது. 




வெள்ளி, 4 ஜனவரி, 2019