திங்கள், 25 மே, 2026
சனி, 9 மே, 2026
2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்கள்
2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்கள் பின்வருமாறு:
நாவல்: ஆத்ம அசைவுகள்.
நூலாசிரியர்: – திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
சிறுகதைத்தொகுதி: முல்லைக் கோணேஸ் சிறுகதைகள்
நூலாசிரியர்: நடராசா கோணேஸ்வரன் (முல்லைக் கோணேஸ்) புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
கட்டுரை: நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்
நூலாசிரியர்: சஞ்சீவ் குமார், நற்பிட்டிமுனை, கல்முனை
கவிதைத் தொகுப்பு : ஹுருலீன்கள்
நூலாசிரியர் – அஷ்ரபா நூர்தீன்
பாலையூற்று, திருகோணமலை.
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026
எனது அம்மப்பா
இன்று தைப்பூசம். எனது அம்மப்பாவின் திதியும் இந்நாளிலேயே வருகிறது. இன்று அவரின் முப்பதாவது வருட நினைவுடன் கடந்துபோகிறேன். அவர் ஒரு பூரண வாழ்க்கையை வாழ்ந்தார் என்று நினைக்கிறேன். அவர் சாதாரணமானவர்களில் இருந்து சற்று வித்தியாசமானவர். தனது முதிய வயதிலும் ஆளளவு உயர பட்டங்களை கட்டி வயல்வெளியில் எல்லோருடனும் சேர்ந்திருந்து ஏற்றுவார். அந்த பட்டங்களின் விண் சத்தம் ஆறு/ ஏழு மைல் தூரத்திற்கு கேட்கும். மூன்று மொழியையும் ஓரளவு கற்றிருந்தவர் ஆனாலும் அரசியலில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை, தமிழர் கட்சிக்கு வாக்கு போடுவதுடன் முடிந்துவிடும். அவர் சிவதீட்சை கேட்டவர், வீட்டில் சமய கலாசாரங்கள் இருக்கும் ஆனாலும் கோயிலுக்கு போவது குறைவு. அவரிடம் ஒரு ரலி சைக்கிள் இருந்தது, அது எப்போதும் கழுவி பூட்டி நல்லநிலையில் இருக்கும். பழமரங்களில் ஒட்டுக்கட்டுவதிலும் ஈடுபாடு இருந்தது. இறுதிநொடிவரை நல்ல ஞாபகசக்தியுடனும் , ஓரளவு நடமாடக்கூடியவராகவும் இருந்தார். இயற்கையை நேசித்துவாழ்ந்தவர் ,அவரது மூன்று பேரர்கள் மாவீரர்களாய் வாழ்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



