வெள்ளி, 19 நவம்பர், 2021

 சில நாட்களுக்கு முன் கடந்துபோன கிளிநொச்சி மண்ணுக்குரிய இரு மரணங்களை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, துயருறுகிறது,ஆழ்ந்த இரங்கலுடன் கடந்துபோக முடியவில்லை. முதலாவது; உயர்கல்வி கனவுகளுடன் ஊற்றுப்புல கிராமத்திலிருந்து நகர் பாடசாலைக்கு வந்த  ஏழை மாணவியின் இழப்பு.  பாதைக்கடவைக்கு  இருபக்கங்களிலும் பாதைக்கடவையின் கரையில் இருந்து நாலு மீற்றர் தூரத்தில் 10 சென்றி மீட்டர் அகல வெள்ளைக்கோடு இடப்பட்டிருக்கவேண்டும், அதற்கு அப்பால்த்தான் வாகனம் அசையாமல் நிற்கவேண்டும் , அப்படி இருந்ததா தெரியவில்லை. குறிப்பிட்ட இடைவெளி இருப்பின் பாதசாரிகளுக்கு  reaction  time போதுமானதாக இருந்திருக்கும். எப்படி என்றாலும் போக்குவரத்து விதிகள் சீராக கடைப்பிடிக்கப்படவேண்டும். இரண்டாவது ; ஆசிரியரின் / அதிபரின் இழப்பு. மக்களுடன் தாங்களும்   இடம்பெயர்ந்து துன்புற்றிருந்த காலத்திலும் மாணவர்களின் கல்வியூட்டலில் சளைக்காமல் ஈடுபட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்த ஏணி. நாங்கள் இழந்திருக்கக்கூடாத இழப்புகள்.